
முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் முதுமலை பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் மசினி என்னும் யானை உள்ளது.
இந்த யானையினை சி.எம்.பாலன் என்னும் பாகன் பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று(ஏப்ரல்.,28) காலை வழக்கம் போல் அந்த மசினி யானைக்கு உணவளிக்க பாகன் அருகில் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அந்த யானை பாகனை தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து பாகன் சி.எம்.பாலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
ஆனால் அவர் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு சமயபுரம் கோயிலில் இருந்த பொழுதே இந்த மசினி யானையானது தனது பாகனை இதே போல் தாக்கி கொன்றுள்ளது.
அதனால் தான் இந்த யானை இந்த வளர்ப்பு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் சி.எம்.பாலன் உயிரிழப்பு;
— Sun News (@sunnewstamil) April 28, 2023
யானைக்கு இன்று காலை உணவு அளிக்க அருகே சென்ற போது பாகனை திடீரென தாக்கியதில், பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே உயிரிழப்பு!
மசினி யானை ஏற்கனவே…