தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
இந்தியா தனது 74வது குடியரசு தினத்தை ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடுகிறது. அரசியலமைப்பு சட்டம் 1950 இல் இயற்றப்பட்ட இத்தினத்தை கெளரவிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே இவ்விழாவின் போது, இந்தியக் குடியரசுத் தலைவர், காவல் துறை மற்றும் ஆயுதப் படைகளின் துணிச்சலான அதிகாரிகளை, துறையில் அவர்களின் விதிவிலக்கான துணிச்சலுக்காகப் பாராட்டி மரியாதை செய்வார். எனவே, பல்வேறு சூழ்நிலைகளில் துணிச்சலை வெளிப்படுத்திய குடிமக்களுக்கும் பல விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தியுள்ளது. பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இந்த இருவரும், இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர்கள். உலகம் முழுவதும், சென்று அதிக விஷத்தன்மைமிக்க பாம்புகளைப் பிடித்தவர்கள். பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள் என்பது மட்டுமல்லாமல், வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகிய, இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாம்பு விஷ முறிவு மருந்துகளை கண்டுபிடித்ததிலும் இவர்கள் முக்கிய பங்காற்றிய இருக்கிறனர். இவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருது இருவருக்கும் வழங்கப்படுகிறது.