NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்
    சமீபத்தில் தான் உயிரிழந்தவரின் மகனும் OYO ரூம்ஸ் நிறுவனருமான ரித்தேஷ் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றது.

    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2023
    07:27 pm

    செய்தி முன்னோட்டம்

    OYO ரூம்ஸ் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் இன்று(மார் 10) மதியம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    குருகிராமில் இருக்கும் செக்டார் 54ல் உள்ள DLF தி க்ரெஸ்ட் சொசைட்டியின் 20வது மாடியில் இருந்து ஒருவர் கீழே விழுந்ததாக மதியம் 1 மணியளவில் DLF பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    "அவர் சிகிச்சைக்காக பராஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்ததில், விழுந்த நபர் ரமேஷ் பர்சாத் அகர்வால் என அடையாளம் காணப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலிலேயே உயிரிழந்தார்" என்று போலீஸார் கூறியுள்ளனர்.

    இந்தியா

    ரித்தேஷ் அகர்வால் திருமணத்தில் மசயோஷி சன்

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சமீபத்தில் தான் உயிரிழந்தவரின் மகனும் OYO ரூம்ஸ் நிறுவனருமான ரித்தேஷ் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றது. மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமண வரவேற்பில் ரமேஷ் அகர்வாலும் கலந்து கொண்டார்.

    திருமணம் செய்துகொண்ட ரித்தேஷ் அகர்வால் மற்றும் கீதன்ஷா சூட், மார்ச் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர தாஜ் பேலஸ் ஹோட்டலில் உயர்மட்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

    உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப தொழில்முனைவோர்களில் ஒருவரான ஜப்பானிய கோடீஸ்வரரும் சாப்ட் பேங்க் குழும நிறுவனருமான மசயோஷி சன் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்ததால் இந்த நிகழ்வு பெரிதாக பேசப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஹரியானா
    டெல்லி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம் தமிழ்நாடு
    2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடக்குமா? 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்! இந்திய அணி
    அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை ட்விட்டர்
    மின் கட்டண உயர்வால் உயர்ந்த வருவாய்! மின்சார வாரியம் மகிழ்ச்சி தமிழ்நாடு

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025