
திடீரென்று பற்றி எரிந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள்: பெங்களூரில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
பெங்களூருவில் உள்ள வீர்பத்ரா நகர் அருகே இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு பேருந்து குடோனில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இதுவரை யாருக்கும் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை.
சம்பவம் நடந்த இடம் திறந்த வெளி என்பதால், தீ விபத்து ஏற்பட்டதும் மக்கள் வேகமாக வெளியேறி விட்டனர்.
முதலில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு அது பேருந்துக்கு பரவியதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
கொழுந்துவிட்டு எரியும் பேருந்துகளின் காட்சி
Private buses parked in a bus depot in Bengaluru's Veerabhadranagar catch fire pic.twitter.com/soVNFniqut
— TOI Bengaluru (@TOIBengaluru) October 30, 2023