'இந்தியா' கூட்டணி நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்கள்
செய்தி முன்னோட்டம்
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வின் வெற்றியினை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி தான் 'INDIA'.
இந்நிலையில் கூட்டணி கூட்டமானது இன்று(செப்.,1) மும்பையில் நடந்தது.
அதில், ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு 13 கொண்ட குழு அண்மையில் அமைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதனிடையே, இக்கூட்டத்தின் நிறைவின் பொழுது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் முக்கியமாக, மக்களவை தேர்தலினை முடிந்த வரையில் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல், மக்கள் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் பிரச்சாரங்கள் நடத்தப்படும் போன்ற மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
#BREAKING | மும்பை ஆலோசனை கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்றிய ‘இந்தியா’ கூட்டணி!#SunNews | #INDIAvsNDA | #INDIA | @mkstalin | @RahulGandhi pic.twitter.com/nBGe6OxBgM
— Sun News (@sunnewstamil) September 1, 2023