ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து - ரயில் சேவை பாதிப்பு
ஊட்டி மலை ரயில் மிக பிரசித்திபெற்றது. காலை மேட்டுப்பாளையத்திலுருந்து ஊட்டிக்கும், மாலை மீண்டும் ஊட்டியில் இருந்து மேட்டுபாளையத்திற்கும் என ஒரு நாளைக்கு 2 மலை ரயில் சேவையானது செயல்படுகிறது. அதன்படி, வழக்கம்போல் இன்று மாலை ஊட்டியில் இருந்து மேட்டுபாளையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்த மலை ரயிலானது புறப்பட்டுள்ளது. அங்கிருந்து குன்னூருக்கு சென்ற ரயிலில் மேலும் ஒருப்பெட்டி இணைக்கப்பட்டு, பயணிகளையும் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுள்ளது. குன்னூர் ரயில்நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 100.,மீட்டர் தொலைவு சென்றநிலையில், ரயிலின் கடைசி 2 பெட்டிகள் தனியாக தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது. இதனால் பயணிகளுக்கு எவ்விதப்பாதிப்பும் ஏற்படாத நிலையில்,அவர்கள் அனைவரும் பத்திரமாக சிறப்பு பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அழைத்துச்செல்லப்பட்டனர். ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி நடப்பதால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.