ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதில் மிகமுக்கியமான ரோஜா கண்காட்சி கடந்த மே 13ம்தேதி துவங்கியது. மேலும் ஊட்டியின் 125வது மலர்கண்காட்சி கடந்த 19ம்தேதி துவங்கியது. இதனையொட்டி பூங்கா நுழைவு வாயிலில் பல வண்ண மலர்களால் ஆன பல்வேறு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வண்ண மலர்களால் ஆன தமிழக மாநில சின்னங்கள், அழியும் பட்டியலில் இருக்கும் விலங்குகளின் உருவங்கள், செல்பி ஸ்பாட்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் அங்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சென்றிருந்த நிலையில், அவருடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடவேண்டியவை.