NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம் 
    மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம் 

    எழுதியவர் Nivetha P
    May 05, 2023
    06:42 pm
    மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம் 
    மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம்

    ஈரோடு மாவட்டம் டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று(மே.,5)வணிகம் செய்வோர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடானது மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி உயிர்காக்கும் மருந்துப்பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டு ஆன்லைன் வர்த்தகத்தினை முறைப்படுத்திடவேண்டும். ஜவுளித்துறை நூல் மூலப்பொருள் விலையேற்றத்தினை கட்டுப்படுத்திட வரிக்குறைப்பு செய்யவேண்டும். ஈரோடு சுற்றுசூழலினை பாதிக்கும் தோல் பதனிடும் தொழில் மற்றும் சாயக்கழிவுகள் சுத்திகரித்திட ஒரு மைய சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும். சிறுகுறு வணிகர்களும் எளிதாக கையாளக்கூடிய விதத்திலும், வணிகர்களுக்கு எதிரான ஜிஎஸ்டி வரி குளறுபடி மற்றும் முரண்பாடுகளை கலைத்திட வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    2/2

     நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வணிகர்களின் மாநாடு 

    மேலும் இந்த மாநாட்டின்பொழுது உள்ளாட்சி,நகராட்சி, மாநகராட்சி,அறநிலையத்துறைக்கடைகளுக்கான முன்தேதியிட்ட வாடகைவிதிப்பு அறிவிப்பினை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும் 2007ம்ஆண்டு அரசு அறிவித்தபடி சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் வாடகையினை நிர்ணயித்திடவும், இதுதொடர்பான வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற்று பின்னர் தற்போதுள்ள உரிமையாளர்களின் பெயரில் மாற்றம் செய்திட அரசு துரித நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்று தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், வணிக உரிமைகள் அனைத்தும் ஒரே இடத்தினில் ஒற்றைச்சாளர முறையில் ஆயுள் உரிமமாக வழங்கிட வேண்டும். அல்லது 5ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்திடும் முறையினை அரசு அறிவிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வணிகர்களுக்கு அவர்கள் செலுத்தும் வரியின் அடிப்படையில் ஓய்வூதியம், காப்பீடு, அரசே காப்பீடு செலுத்தும்முறை போன்றவற்றை கொண்டுவரலாம் என்றும் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஈரோடு
    வணிகம்

    ஈரோடு

    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது தமிழ்நாடு
    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.5 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை  மாவட்ட செய்திகள்
    மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்

    வணிகம்

    சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    'சந்தைப்படுத்துதலுக்கு AI-யில் முதலீடு செய்ய நாங்கள் தயார்' - புதிய ஆய்வு!  செயற்கை நுண்ணறிவு
    குறையும் முதலீடுகள்.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்! முதலீடு
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023