Page Loader
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு துவக்கம் 
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு துவக்கம்

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு துவக்கம் 

எழுதியவர் Nivetha P
May 08, 2023
11:34 am

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு கண்காணிப்பில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 1,547 அரசு, அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் அறிவியல்-கலை கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதனுள் இளநிலை படிப்புகளில் சேர 1,07,395 இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் பதிவானது இன்று(மே.,8) முதல் துவங்கப்பட்டுள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் தேர்வு முடிவுகள் இன்று வெளியான பட்சத்தில், இந்த மாணவர் சேர்க்கைக்கான பதிவானது துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவானது வரும் மே 19ம் தேதி வரை நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. www.tngasa.in என்னும் இணையத்தளத்தில் மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post