ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன்.,2ம்தேதி பாலசோரில் கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே, இந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மேற்குவங்க மாநிலம் மேதினிபூரில் ஜூன் 3ம்தேதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து விபத்துகள் அரங்கேறி வரும் நிலையில்,ரயில்வே ஊழியர் ஒருவரின் துரிதச்செயலால் பெரும் ரயில் விபத்தானது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒடிசா-பாத்ரக் மாவட்டத்தில் மஞ்சூரி ரோடு ரயில் நிலையத்தின் அருகே தண்டவாளங்களின் இன்டர்லாக் நடுவில் ஒரு பாராங்கல் இருந்துள்ளது. இதனை ரயில்வே ஊழியர் ஒருவர் கண்டறிந்து எடுத்துள்ளார். இதனால் நடக்கவிருந்த பெரும் ரயில்விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.