
நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
செய்தி முன்னோட்டம்
வடகிழக்கு பருவமழையானது 2021ம் ஆண்டைவிட கடந்தாண்டு மழை சற்று குறைவாகவே பெய்துள்ளது என்று கூறப்படுகிறது.
சென்னையில் மக்கள்தொகை அதிகரிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மழைநீர் சேகரிப்பின் தொலைநோக்கு பார்வையின்மை, போன்ற காரணங்களினால் நிலத்தடிநீரினை போதியளவு நம்மால் சேகரிக்க முடியவில்லை.
விரிவாக்கத்திற்கு முன்னர் சென்னை மாநகராட்சியில் ஏரி, குளங்களின் எண்ணிக்கையானது குறைந்தே காணப்பட்டது.
2011ம்ஆண்டு விரிவாக்கத்திற்கு பின்னர் சென்னையை சுற்றியுள்ள பல நீர்நிலைகள் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் 210 நீர்நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை 'ஸ்மார்ட்சிட்டி' திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வடிகால் உள்பகுதி, சாலையோரம் பூங்கா என 2,450 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதன்மூலம் கடந்தசில ஆண்டுகள் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது என்று கூறப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்
சென்னை மக்கள் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்-குடிநீர் வாரிய அதிகாரிகள்
இதனைதொடர்ந்து சாலை, கால்வாய், வடிகால் கட்டமைப்புகள் முதலியன ரூ.3000கோடிக்கு மேல் செலவிடப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் மழைநீரானது நேரடியாக பூமிக்குள் செல்லும் வகையில் கட்டமைப்புகள் செய்யப்படவில்லை என்று சமூகஆர்வலர்கள் மத்தியில் ஓர் குற்றச்சாட்டு இருந்து கொண்டுதான் உள்ளது.
காலநிலை மாற்றத்தால் பருவமழை போதியஅளவு பெய்யவில்லை.
சென்னை முழுவதும் மழை சமமாக பெய்யாத காரணத்தினால் பூமிக்குள் நீர் இறங்கவில்லை. எனவே இந்தாண்டு சென்னையின் குடிநீர் தேவையினை கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஏரிகள் மூலம் நிவர்த்தி செய்யப்படவுள்ளது.
அதனால் இந்தாண்டு கோடையை சமாளிக்க முடியும்.
சென்னை மக்கள் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.
மழைநீர் சேமிக்கும் வகையில் கட்டமைப்பினை பொதுமக்கள் அதிகரித்தால் நிலத்தடிநீர் பிரச்சனையினை தவிர்த்துவிடலாம் என்றும் அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.