ஒடிசா முதல்வராக பதவியேற்றார் பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி
ஒடிசா முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்றுள்ளார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த மோகன் மாஜி, ஒடிசாவின் முதலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார். 52 வயதான மோகன் சரண் மாஜி ஒடிசாவின் ஒரு முக்கிய பழங்குடியின தலைவர் ஆவார். மேலும், கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் ஒடிசாவின் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இதற்கான பதவியேற்பு விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தலைவர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஜனதா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த விழாவில் விவிஐபிகள் தவிர சுமார் 30,000 பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஒடிசாவின் முதல் பாஜக முதல்வர்
இந்த பதவியேற்பு விழாவை முன்னிட்டு புவனேஸ்வரில் உள்ள அலுவலகங்கள் பிற்பகல் 1 மணி முதல் மூடப்படும் என்றும் ஒடிசா அரசு அறிவித்துள்ளது மூடப்பட்டது. முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஒடிசா மாநிலத்தில் பாஜகவின் முதல் முதலமைச்சராக மனோஜ் மாஜி பதவியேற்றுள்ளார். இதற்கிடையில், பதவியேற்பு விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களிலும், பிஜேடி 51 இடங்களிலும் வெற்றி பெற்றன.