எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை - G-Square நிறுவனம்
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் G-Square நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.700கோடி வரிஏய்ப்பினை இந்த நிறுவனம் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ.3.50கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக G-Square நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், எந்த அரசியல் கட்சியினருடனும் எங்களுக்கு தொடர்பில்லை என்பதை வருமானவரித்துறை அதிகாரிகளே உறுதிப்படுத்தியுள்ளனர். எங்கள் நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.38,000கோடி என கூறுவதும் தவறு. வருமானவரி சோதனையில் ரூ.3.50கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலும் தவறானது என்று இந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பினை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்றும் G-Squareநிறுவனம் சாடிப்பேசியுள்ளது.