பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர்
செய்தி முன்னோட்டம்
அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடுமையான போட்டியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என நோபல் பரிசு குழுவின் துணை தலைவர் ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடுமையான போட்டியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான்.
அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி திகழ்கிறார்.
இவர் உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும், அமைதிக்கான மிக நம்பகமான முகமாகவும் உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிக்கு பேட்டி
நோபல் பரிசினை மோடி வென்றால், அது வரலாற்று தருணமாக இருக்கும்
ஒரு வேளை அமைதிக்கான நோபல் பரிசினை மோடி வென்றால், அது தகுதியான தலைவருக்கு கிடைத்த வரலாற்று தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறியது குறிப்பிடவேண்டியவை.
மேலும் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பனிப்போரின் காரணமாக, இருநாடுகளுக்கு இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதியின் தூதராக செயல்பட்டு வருகிறார்.
உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆஷ்லே டோஜே கூறியுள்ளார்.
இவரது இந்த பேட்டியும், அதில் அவர் கூறியுள்ள கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.