குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு
நாட்டில் குரங்கு கடியால் பலியாகியவர்களின் எண்ணிக்கை குறித்து தங்களிடம் எந்த பதிவும் இல்லை என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நாடாளுமன்றத்தில் நேற்று(மார் 13) தெரிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக ) எம்பி ராஜ் குமார் சாஹர், பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி குரங்குகள் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்குவது என்பது குறித்து விளக்கம் கேட்டு நாடாளுமன்றத்தில் கவலை எழுப்பினார். "மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் கருணைத் தொகை நிவாரணத்தை, நிதியின் இருப்புக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்ட விகிதங்களின்படி மாநிலங்கள் திருப்பிச் செலுத்தலாம் என்று கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டது" என்று அமைச்சகம் கூறியது.
வழங்கப்படும் கருணைத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது
2015ஆம் ஆண்டில் 1,900க்கும் மேற்பட்ட குரங்கு கடிகள் பதிவாகி இருந்தன என்றும் அதற்கு முந்தைய ஆண்டை விட 400க்கும் மேற்பட்ட சமப்வங்கள் அகிகமாக பதிவாகியுள்ளது என்றும் முன்பு மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து குரங்கு கடிகள் தேசிய தலைநகரில் பதிவாகி இருந்தன. வன விலங்குகளால் ஏற்படும் தாக்குதல்கள், காயங்கள் மற்றும் சேதங்கள் ஆகியவை மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் வரும் என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 2018இல் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அரசாங்கம் அளித்த பதிலில், இதுபோன்ற தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்திருக்கிறது.