அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை - தமிழக அரசு
தற்போதைய தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளார்கள். இதனிடையே தற்போது 5வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசுப்பேருந்துகளில் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் அரசுப்போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படுகிறது. அதனுள் 10 ஆயிரம் டவுன்பேருந்துகள் சென்னை, கோவை, மதுரை போன்ற பகுதிகளில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் முன்னதாக 3 வயது வரை குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம். இதனை தற்போது 5வயது வரை அதிகரித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 5வயது மிகாத குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் விரைவு பேருந்துகளில் சிறுவர்களுக்கு வசூலிக்கப்பட்ட அரைட்டிக்கெட் கட்டணம் இனி 5முதல் 12வயது வரையுள்ளவர்களுக்கு வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.