
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கும் நித்யானந்தா: முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
அயோத்தியில் நாளை நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும் பிரபல சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
"இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை தவறவிடாதீர்கள்! பாரம்பரிய பிராண பிரதிஷ்டை விழாவின் போது, பகவான் ராமர், கோவிலின் பிரதான தெய்வமாக முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, உலகத்திற்கு ஆசிர்வாதம் வழங்குவார்! இந்நிலையில், முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, இந்து மதத்தின் உச்ச பீடாதிபதி பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்." என்று நித்யானந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
திலகவ்
நித்யானந்தா மீது இருக்கும் குற்றச்சாட்டுகள்
நித்யானந்தா மீது பல பாலியல் புகார்கள் உள்ளன.
அதற்காக, 2010-ம் ஆண்டு அவரது ஓட்டுனர் கொடுத்த புகாரின் பேரில், நித்யானந்தா கைது செய்யப்பட்டார்.
2010ம் ஆண்டு கார்நாடக அமர்வு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டினை அவருக்கு பிறப்பித்தது.
அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், குஜராத் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகளை கடத்திய வழக்குகளும் உள்ளன.
அதன் பிறகு, பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி ஜாமீனில் வெளிவந்த நித்யானந்தா, அந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க, 'கைலாசா' என்னும் நாட்டினை உருவாக்கி அதில் தற்போது வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள நித்யானந்தாவை மத்திய அரசு முறைப்படி இந்தியாவுக்கு அழைத்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.