தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(PFI) என்ற அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. அண்மையில், இந்த அமைப்பிற்கு சிலர் நிதியுதவி செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் கேரளாவின் பல இடங்களில் NIA சோதனை செய்து வருகிறது. சோதனையின் இரண்டாம் நாளான இன்று திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, மலப்புரம், எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்த அமைப்பு பரவி இருந்தாலும், கேரளாவில் தான் இது முழு வீச்சில் செயல்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், இதன் உறுப்பினர்கள் ரகசியமாக செயல்படுவதாகவும் நிதி திரட்டுவதாகவும் NIAவுக்கு ஒரு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், கேரளா முழுவதும் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(PFI) தடை:
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(PFI) என்ற அமைப்பு 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு 22 மாநிலங்களில் கிளைகள் இருந்தன. சமீபத்தில், இந்த அமைப்பு, இதனை சார்ந்த அமைப்புகள் மற்றும் இதன் முன்னணிகள், இந்திய நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு( UAPA) கீழ் 5 ஆண்டுகள் இந்த அமைப்பை தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த அமைப்பு இன்னும் ரகசியமாக இயங்கி வருகிறதா என்பதைக் கண்டறிய இதன் உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்களின் வீடுகளில் NIA சோதனை செய்து வருகிறது.