
அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை
செய்தி முன்னோட்டம்
சீனா போன்ற நாடுகளில் BF.7 என்ற கொரோனா வகை அதிகம் பரவி வருவதால். உலக நாடுகள் எல்லாம் நடுநடுங்கி போய் இருக்கிறது.
இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 24ஆம் தேதி முதல் சர்வதேச விமானிகளுக்கான கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் 39 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:
1. அடுத்த 30-40நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு நிச்சயம் அதிகரிக்கும்.
2. மத்திய சுகாதாரத்துறை, தேசிய தடுப்பூசி நிபுணர்களுடன் இணைந்து BF 7 கொரோனா திரிபிற்கான தடுப்பூசிளை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.
3. புதிய பூஸ்டர் தடுப்பூசிகள் அவசியமா என்பதையும் அவர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
29 Dec 2022
கொரோனா பரவல்: ஒரு அப்டேட்!
உலக கொரோனா பாதிப்பு 66,31,87,640 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று வரை 6,690,752 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வ்தேச விமானிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில், 39 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 39 பேருக்கும் இருப்பது எந்த வகையான கொரோனா என்பதை கண்டறிய இவர்களது பரிசோதனை மாதிரி மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில், தமிழகத்தில் மட்டும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த BF.7 வகை கொரோனா 16 மடங்கு அதிகம் பரவ கூடியது என்று சுகாதாரதுறை அமைச்சகம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.