
உயிரி எரிபொருள் கலந்த பெட்ரோல் பயன்பாடு.. யாருக்கு லாபம்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பெட்ரோலில் 2030-ம் ஆண்டுற்குள் 20% உயிரி எரிபொருள் (Biofuel) கலப்பை உறுதிசெய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கானது கடந்த ஆண்டு 2030-ல் இருந்து 2025-26-க்கு குறைக்கப்பட்டது. பெட்ரோலில் ஏன் உயிரி எரிபொருள் கலக்கப்படுகிறது. இதனால் என்ன லாபம்?
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலை சார்ந்திருப்பதை குறைக்கவும், இந்தியாவில் வேலைவாய்ப்பை பெருக்கவும் தேசிய உயிரிஎரிபொருள் கொள்கையை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது மத்திய அரசு.
கரும்புச்சாறு, பயன்படுத்த முடியாத தானியங்கள் ஆகியவற்றில் இருந்து எத்தனாலை தயாரிக்க திட்டமிடப்பட்டது. அந்த எத்தனாலானது பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது.
இந்த எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு 27 லட்சம் மெட்ரிக் டன்கள் அளவு குறைந்திருக்கிறது.
இந்தியா
உயிரி எரிபொருள் கலப்பு.. என்ன லாபம்?
உயிரி எரிபொருளை பெட்ரோலுடன் கலப்பதனால், பெட்ரோலுக்கு செலவிட வேண்டிய ரூ.41,500 கோடி இந்தியாவிற்கு மிச்சமாகியுள்ளது. மேலும், பெட்ரோலுக்கு பிற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையும் கொஞ்சம் குறைந்திருக்கிறது.
எத்தானால் கலந்த பெட்ரோலை பயன்படுத்த வாகன உற்பத்தியாளர்கள் அதற்கென தங்கள் தயாரிப்புகளில் பிரத்தியேக மாற்றங்களை செய்ய வேண்டும். இதனால் வாகன விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தூய்மையான பெட்ரோலை விட உயிரி எரிபொருள் கலந்த பெட்ரோலின் விலை குறைவு தான். எனினும், தூய்மையான பெட்ரோல் கொடுப்பதை விட 6-7% குறைவான பெட்ரோலையே இந்த உயிரி எரிபொருள் கலந்து பெட்ரோல் கொடுக்கும். இதனால், நீண்ட கால ஒப்பீட்டில் இது நமக்கு அதிக செலவு தான். மேலும், கலப்பட பெட்ரோலை பயன்படுத்தும் வாகனங்களின் பராமரிப்புச் செலவும் அதிகம்.