
தமிழகத்தில் களைகட்டிய பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாகூரில் சிறப்பு தொழுகை
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று நாகூரில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். ஜாக் அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாடினர்.
அதனால் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் நேற்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில் அமைப்பின் தலைவர் அன்சாரி பிர்தவுசி, பக்ரீத் பண்டிகை தொடர்பான உரை நிகழ்த்தி, வாழ்த்து கூறினார்.
பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
#NewsUpdate | பக்ரீத் சிறப்பு தொழுகை!#SunNews |#Bakrid | #TNBakridCelebration pic.twitter.com/Fsf9lZohpR
— Sun News (@sunnewstamil) June 17, 2024