
தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தூத்துக்குடி மாவட்டம்-வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்ஸிஸ் கடந்த ஏப்ரல்.25ம்தேதி 2 மர்ம நபர்களால் அலுவலகத்திற்குள் வைத்தே அரிவாளால் வெட்டப்பட்டார்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மணல் கொள்ளை குறித்து லூர்துபிரான்ஸிஸ் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்ததுடன், அவர்கள்மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
இதன் முன்விரோதக்காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது.
இதனையடுத்து லூர்து பிரான்சிஸை கொலைச்செய்த ராமசுப்ரமணியம்(41)மற்றும் மாரிமுத்து(31)ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது இவ்வழக்கினை 2 மாதங்களில் விசாரித்து முடிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING || "தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு விஏஓ கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்"
— Thanthi TV (@ThanthiTV) May 10, 2023
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு#VAOmurder | #thoothukudi #maduraicourt pic.twitter.com/7CJqq5lBcZ