திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக அண்மையில் பதவியேற்றவர் ராஜேந்திரன், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
அதன்படி, விதிமீறல்களில் ஈடுபட்டு வாகனம் ஓட்டியதாக கூறி 4,052பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்துசெய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ஆர்.டி.ஓ.க்கும் பரிந்துரை செய்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இவர் சமீபகாலமாக விபத்துகளை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
அதன்பேரில் இருசக்கரவாகனத்தில் பின்னில் பயணிப்போரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் 4,052 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்து மாநகர காவல்துறை அண்மையில் ஓர் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த செய்திகுறிப்பில், கடந்த 2022ம்ஆண்டில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், தொலைபேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், சிக்னல்விதிகளை மீறுதல், சரக்குவண்டிகளில் ஆட்களை ஏற்றிசெல்வது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் 4052வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.
ரத்து செய்ய பரிந்துரை
2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை பதிவான வழக்குகளை ஆர்.டி.ஓ.க்கு அனுப்பிய காவல்துறை
இந்த வழக்குகளை ஆர்.டி.ஓ.க்கு பரிந்துரை செய்ததில் 4052 வழக்குகளின் வாகன ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதே போல், 2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அளவுக்கு மீறி பொருட்களை ஏற்றி செலுதல் போன்ற குற்றங்களின் கீழ் 563 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த குற்றத்தின் கீழ் பதிவாகியுள்ள 1665 வழக்குகளையும் ஆர்.டி.ஓ.க்கு அனுப்பி வைத்துள்ள மாநகர காவல் ஆணையர் அந்த வழக்குகளில் சிக்கிய ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய கோரி பரிந்துரை செய்துள்ளார் என்றும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.