இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது
வேலூரில் இஸ்லாமிய பெண்களிடம் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 22ஆம் தேதி சில இஸ்லாமிய பெண்கள் தங்களது ஆண் நண்பர்களுடன் வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஆண் நண்பர்களுடனோ காதலருடனோ சுற்றுலா வந்திருந்த சில இஸ்லாமிய பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் அந்த பெண்களை வீடியோ எடுத்தனர். அதன் பின், அந்த இஸ்லாமிய பெண்களிடம் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்தனர்.
7 பேரை கைது செய்த வேலூர் போலீஸார்
மேலும், இந்து இளைஞர்களுடன் ஏன் சுற்றுகிறீர்கள் போன்ற கேள்விகளையும் அந்த பெண்களிடம் அவர்கள் கேட்டதாக தெரிகிறது. பர்தா அணிந்திருந்த அனைத்து ஜோடிகளிடமும் அவர்கள் இப்படி வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து, இப்படி ஒரு விஷயம் நடந்தது வேலூர் போலீஸாருக்கு தெரியவந்து. சம்பவத்தை பற்றி தெரிந்துகொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். சம்பவத்தின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவை வெளியிடக்கூடாது என்றும் அவர்களை எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது