Page Loader
20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 
அமைச்சர் பொன்முடி, இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது

20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2023
08:08 am

செய்தி முன்னோட்டம்

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8 மணி வரை தொடர்ந்த இந்த சோதனையின் இறுதி கட்டமாக, அமைச்சர் பொன்முடியை, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, பொன்முடி அவரது காரிலேயே அழைத்து சென்றனர். நள்ளிரவு வரை தொடர்ந்த விசாரணையில் இறுதியில், அவர் கைது செய்யப்படவில்லை என்றும், இன்று (ஜூலை 18) மாலை, அமைச்சர் பொன்முடியும், அவரது மகன் கௌதமும், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜர் ஆகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

card 2

நள்ளிரவு வரை தொடர்ந்த ரெய்டு

அமைச்சர் பொன்முடியிடம், நேற்று இரவு 8மணி முதல் நடைபெற்ற விசாரணை, இன்று அதிகாலை 3 மணியளவில் நிறைவடைந்தது. தொடர்ந்து அவர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் மற்றும் சென்னை இல்லங்களில், காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனைகள், 19மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தன எனவும் அறிவிக்கப்பட்டது. அமைச்சருக்கு சொந்தமான கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் சோதனை நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பொன்முடியின் வழக்கறிஞர் சரவணன், "விசாரணை நடத்துவதாக கூறி அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுகளை பின்பற்றவில்லை. கவர்னரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு, அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதிலளித்தார்" என்று தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

விசாரணைக்குப் பிறகு, அதிகாலையில் வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி