
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை
செய்தி முன்னோட்டம்
கடந்த மாதம், தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தை அடுத்து, தற்போது, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இன்று,(ஜூலை 17) காலை தொடங்கிய இந்த சோதனையில், 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றது.
சென்னை சைதைபேட்டை, ஸ்ரீநகர் காலனியில் உள்ள, அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை அடுத்து, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
சென்ற வாரம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்த நில அபகரிப்பு வழக்கில், பொன்முடி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பொன்முடி வீட்டில் சோதனை
#BREAKING | சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
— Sun News (@sunnewstamil) July 17, 2023
காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது#SunNews | #Ponmudi