திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெளிமாநில தொழிலாளியை அரிவாளால் வெட்டி வீடியோ எடுத்த சிறுவர்கள் கைது
செய்தி முன்னோட்டம்
சென்னை அருகே திருவள்ளூரில் ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளி ஒருவரை, ஒரு கும்பல் ஓடும் ரயிலில் வைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சென்னை நோக்கிச் செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தொழிலாளியின் தலை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டினர். அதை வீடியோவும் எடுத்தது அந்த கொடூர கும்பல்.
மீட்பு
மீட்பு மற்றும் காவல்துறை நடவடிக்கை
பின்னர் ஸ்டேஷனலில் இறங்கி ஆள்நடமாட்டமற்ற இடத்தில் சிராஜை சரமாரியாக தாக்கியது அந்த கும்பல். அதை வீடியோவும் எடுத்தது அந்த கொடூர கும்பல். இந்த நிலையில் பலத்த காயமடைந்த தொழிலாளி உடனடியாக மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்துத் தேடி வந்த ரயில்வே காவல்துறை, தற்போது 5 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் மூவர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மின்சார ரயில்களில் பட்டப்பகலில் அரிவாளுடன் ரவுடிகள் உலா வருவதும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.