
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
சிங்கப்பூரில் இன்று(மே.,24)மாலை 4 மணியளவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரில் உள்ள மின்னணு பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.ஐ-பி இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இந்த ஒப்பந்தமானது ரூ.312கோடி முதலீடு, 700பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அதேபோல்,சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் மற்றும் தமிழகத்தின் சிப்காட் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து,சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் மற்றும் தமிழகத்தின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் ஒப்பந்தமானது.
மேலும்,தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவனத்துக்கும் சிங்கப்பூர் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி&டிசைன் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தமாகியுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் சிங்கப்பூர் ஐ.டி.ஈ.எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத்திற்கும் இடையேயும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்!#SunNews | #Singapore | @mkstalin | @TRBRajaa pic.twitter.com/2fcMONX1ne
— Sun News (@sunnewstamil) May 24, 2023