மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. 100க்கும்மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரியில் 3ம்ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவிக்கு மூத்த மருத்துவர் நேற்று(மே.,30)சுமார் 2 மணியளவில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரி முதல்வரிடம் புகாரளித்துள்ளார். ஆனால் அந்த புகார்மீது கல்லூரி முதல்வர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும்மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் செய்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து கல்லூரி முதல்வரும், செங்கல்பட்டு காவல்துறையினரும் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாலியல் தொல்லை கொடுத்த மூத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.