நீதி கோரும் மணிப்பூர் மக்கள் - எம்.பி.கனிமொழி பேட்டி
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தே என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கிய நிலையில், அது கலவரமாக மாறியது. கடந்த மே மாதம் 2ம் தேதி துவங்கிய இந்த கலவரத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் துணை ராணுவ படைகள் கலவரத்தினை கட்டுக்குள் கொண்டு வர குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் கள நிலவரம் குறித்து ஆராய போவதாக கூறி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மணிப்பூர் சென்றனர்.
காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை-கதறும் மணிப்பூர் பெண்கள்
அதன்படி அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய இந்த எம்.பி,க்கள் குழு இன்று(ஜூலை.,30) டெல்லிக்கு திரும்பியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனிடையே டெல்லி திரும்பிய திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண்களை பெண் எம்.பி.க்கள் மட்டுமே தனிமையில் சந்தித்து பேசினோம். அவர்களை எவ்வாறு தேற்றுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. பாதுகாப்பு அளிக்கவேண்டிய காவல்துறையே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறினர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியதாகவும் கனிமொழி கூறியது குறிப்பிடத்தக்கது.