மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு
மதுரையில் மிக முக்கிய திருவிழாக்களுள் ஒன்று சித்திரையில் நடைபெறும் 'சித்திரை திருவிழா'. இதற்கு அடுத்தபடியாக மதுரையில் புகழ்பெற்ற திருவிழாவாக கருதப்படுவது திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடக்கும் பங்குனி திருவிழா ஆகும். அதன்படி இந்தாண்டு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வரும் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து புறப்படுவார்கள். பின்னர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருள்வார்கள் என்பது சிறப்பம்சம் வாய்ந்தவை ஆகும்.
ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகளில் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
அதன் பின்னர் திருப்பரங்குன்றம் திருக்கோயிலிருந்து மீண்டும் இரவு பறப்பாடாகி நள்ளிரவு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வந்து சேர்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனையொட்டி அன்றைய தினம் அதாவது வரும் ஏப்ரல் 8ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அருள்மிகு அம்மன், அருள்மிகு சுவாமி புறப்பட்டு சென்று திரும்ப நள்ளிரவு வந்து சேரும் வரை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகளில் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மீனாட்சியம்மன் திருக்கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.