மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை
செய்தி முன்னோட்டம்
மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலமாக லட்சக்கணக்கான பக்தர்கள்சூழ நடைபெறுவது வழக்கம்.
இந்த அழகர் சித்திரை திருவிழாவானது 10நாட்கள் நடைபெறும்.
முதல் 2நாட்கள் அழகர் கோயிலில் இருப்பார்.
3ம்நாள் மாலை மதுரையினை நோக்கிப்புறப்பட்டு அலங்காநல்லூர் சென்றடைகிறார்.
அங்கு அழகரை குதிரைவாகனத்தில் தூக்கிவைத்து அலங்காரம் செய்வார்கள்.
அங்கிருந்து தேனூருக்கு வந்து வைகையாற்றில் அழகர் இறங்குவார்.
அதன்பின்னர் வண்டியூருக்கு வந்து மண்டூகமுனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பார்.
4ம்நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்துசேருகிறார்.
அதற்கு மதுரையின் எல்லையான மூன்று மாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
தல்லாகுளம் பெருமாள்கோயிலுக்கு வரும் அழகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடக்கும்.
அவருக்கான அலங்காரப்பொருட்கள் ஒருப்பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.
கோயில்
உற்சவ சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டு கொண்டாட்டம் நிறைவுபெறும்
அந்த மரப்பெட்டியில் இருந்து அர்ச்சகர் கைவிட்டு எடுக்கும் பட்டுப்புடவை தான் அழகருக்கு அணிவிக்கப்படும்.
அதன் நிறத்தினை கொண்டு இந்தாண்டு எப்படி இருக்கும் என்று கூறப்படுவது ஒரு நம்பிக்கையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
5ம்நாள் பவுர்ணமி தினத்தன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.
ஆற்றுக்குள் அழகரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார்,
இருவரும் மாலை மாற்றி கொள்வார்கள்.
6ம்நாள் அதிகாலை அழகருக்கு வண்டியூரில் ஏகாந்தசேவை நடக்கும்.
7ம்நாள் காலை அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார்.
8ம்நாள் அதிகாலை பூப்பல்லக்கில் மலைநோக்கி கிளம்பும் அழகர் வழிநெடுக்க பூஜைகளை ஏற்றுக்கொண்டு 9ம்நாள் காலையில் அழகர் கோயிலினை சென்றடைவார்.
10ம்நாள் பயணக்களைப்பு நீங்க அவருக்கு உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கும்.
இத்துடன் 10 நாட்கள் கொண்டாட்டம் நிறைவுபெறும்.