
சென்னையில் தரமில்லாத குடிநீர் கேன்கள் - உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் சென்னை போன்ற மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர்கேன்கள் தேவையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குடிநீர்கேன் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர்.
உரிய ஐ.எஸ்.ஐ.முத்திரை இல்லாதது, கேன்வாட்டரை முறையாக சுத்தம் செய்யாமல் குடிநீர் விற்பனையினை மேற்கொள்வது போன்ற பல்வேறு முறைகேடுகளை மேற்கொண்ட கடைகளில் புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதன்படி சென்னையில் குடிநீர் தயாரிக்கும் கொண்டித்தோப்பு, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக இன்று(மே.,19)மட்டும் 19 கடைகளில் அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டதில் 6 கடைகளுக்கு தரமில்லாத குடிநீர் விநியோகம் செய்ததாக நோட்டிஸ் அளித்துள்ளனர்.
தொடர்ந்து அந்த கடைகளில் இருந்த குடிநீர் மாதிரிகளையும் எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Breaking || தரமில்லாத குடிநீர் கேன்கள்..உணவு பாதுகாப்பு துறை ஆய்வில் பரபரப்பு..சென்னையில் அதிர்ச்சி#rowater #drinkingwater #foodsafety #ThanthiTV https://t.co/aJGylnykBE
— Thanthi TV (@ThanthiTV) May 19, 2023