NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை
    சபரிமலை ஐயப்பன் கோயில்

    சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை

    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2023
    06:20 pm

    செய்தி முன்னோட்டம்

    அரவணை பாயசமானது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்லும் முக்கிய பிரசாதங்களில் ஒன்றாகும்.

    தற்போது விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்து, அரவணை பாயசத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.

    இதற்கிடையில், சபரிமலை கோயிலில் ஏலக்காய் டெண்டர் நிராகரிக்கப்பட்ட ஏலக்காய் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் என்பவர், கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஏலக்காய் தரத்தின் மீது ஐயம் கொண்டு கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனையடுத்து, அரவணை பாயசத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள உணவு பொருள் ஆய்வகத்தில் அரவணை பாயசம் ஆய்வு செய்யப்பட்டது.

    உள்ளூர் சந்தியிலேயே கொள்முதல் செய்த தேவசம் போர்டு

    அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சி மருந்து கொண்ட ஏலக்காயை பயன்படுத்தியது அம்பலம்

    இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவு பூச்சி பூச்சிமருந்து கொண்ட ஏலக்காய் அரவணை பாயசத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் ஆய்வகத்தின் அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தின் தேசவம் போர்டு அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருவதால், அரவணை பாயசம் கூடுதலாக தேவைப்பட்டுள்ளது.

    இதற்காக அரவணை பாயசத்தில் பயன்படுத்துவதற்கான ஏலக்காயை தேவசம் போர்டு உள்ளூர் சந்தையிலேயே கொள்முதல் செய்துள்ளது.

    இது குறித்து தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    இந்தியா

    இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா! அமெரிக்கா
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம் தொழில்நுட்பம்
    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா? 5ஜி தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025