
ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?!
செய்தி முன்னோட்டம்
மீண்டு வரும் தமிழகம்:
மாண்டஸ் புயலால் சென்னையில் மட்டும் 700 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் கணக்கீட்டின்படி தெரியவந்துள்ளது.
சென்னையில் தற்போது வரை 400 மரங்கள் விழுந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரண பொருட்களை அரசு வழங்கி வருகிறது.
ஏற்கனவே இருந்த காற்றும் புயலும் குறைந்திருந்தாலும் இன்னும் தமிழகத்தின் பல இடங்களில் மழைப் பெய்துகொண்டு தான் இருக்கிறது.
இதற்கிடையில், அரபிக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைப் பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Dec 2022
கனமழையால் குறிப்பிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழைக் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயக்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(டிச,13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.