NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு
    சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு

    சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    09:47 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டர் அறிவிக்கப்பட்டது.

    இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்த்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிடகோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது, எந்தெந்த வழித்தடங்களில் தாழ்த்தள பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 130கிராம வழித்தடங்களில் பேருந்துகள் இயங்குகிறது.

    அந்த சாலைகள் குறுகலாக இருக்கும் காரணத்தினால் தாழ்த்தள பேருந்துகளை அப்பகுதியில் இயக்கினால் பேருந்துகள் கடுமையாக சேதமடையும் என்று கூறப்பட்டிருந்தது.

    பிப்ரவரி 20ம் தேதி

    தாழ்தள பேருந்துகள் இயக்க முடியாத வழித்தடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    இதனை தொடர்ந்து, சென்னை சுரங்கப்பாதை வழியாக 173 வழித்தடங்களில் தாழ்த்தள பேருந்துகளை இயக்கினால் மழை காலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடும்.

    இதே போல் மினி பேருந்துகள் இயங்கும் 74 தடங்களிலும், மெட்ரோ பணிகள் நடக்கும் 186 வழித்தடங்களிலும் தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை.

    இதனால் 342 தாழ்தள பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றை தோராயமாக 65 வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் தாழ்தள பேருந்துகள் இயக்க முடியாத வழித்தடங்களில் மனுதாரர்கள் தரப்பு உள்ளிட்டோரை இணைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

    மேலும் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு
    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே

    சென்னை

    17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை பைக்கர்
    புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்! இந்தியா
    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு போராட்டம்

    தமிழ்நாடு

    16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம் மாவட்ட செய்திகள்
    முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: மாநிலம் முழுவதும் களப்பணி செய்யப்போவதாக அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றம்
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025