பெரியாரின் கொள்கை வழியில் கடைசிவரை நின்ற தலைவர்; ஈவிகேஎஸ் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றி வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த ஒரு மாதமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலமானார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தி, இளங்கோவன் காங்கிரஸ் மற்றும் தந்தை பெரியாரின் விழுமியங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட, அச்சமற்ற, கொள்கை ரீதியான தலைவர் என்று கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, அவரது மறைவுக்கு கட்சி வேறுபாடுகளை தாண்டி, பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, ஈவிகேஎஸ் மறைவையொட்டி, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.