இந்திய பெண் உரிமை சட்டங்களின் பட்டியல்
சம ஊதியத்திற்கான உரிமை ஆண் பெண் இருபாலருக்கும் சமமான முயற்சிக்கு சமமான ஊதியம் உண்டு. இதுவே சம ஊதியச் சட்டத்தால் வழங்கப்படுகிறது. பணிகள் வழங்குவதில் அல்லது பணியமர்த்தலில் பாலின அடிப்படையிலான பாகுபாடு எதுவும் இருக்கக்கூடாது என்பதையும் இந்த சட்டம் உறுதி செய்கிறது. பரமரிப்பு உரிமை வாழ்க்கைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற தேவைகள் ஆகியவை பராமரிப்பு உரிமையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் பெறுவதற்கு பெண்களுக்கு முழு உரிமை இருக்கிறது. சொத்துரிமை மகன்களுக்கும் மகள்களுக்கும் சொத்துகள் வழங்குவதில் பாகுபாடுகள் எதுவும் இல்லாததை இந்த சட்டம் உறுதி செய்கிறது. பாதுகாப்பு உரிமை பெண்களை யாராவது எந்த விதத்திலாவது காயப்படுத்தவோ கொல்லவோ முயற்சித்தால், அவர்களைக் கொல்ல அந்த பெண்ணுக்கு அனுமதி உண்டு.
இலவச சட்ட உதவி பெறுவதற்கு உரிமை இருக்கிறது
குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்ப வன்முறையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உரிமை உள்ளது. குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியாக மட்டுமல்ல, உளவியல், பாலியல் மற்றும் நிதி துஷ்பிரயோகத்தையும் உள்ளடக்கியது. பணியிடத்தில் பெண்களின் உரிமைகள் கழிவறைக்கான உரிமை பணிபுரியும் பெண்களுக்கு உண்டு. 30க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களைக் கொண்ட பணியிடங்களில் குழந்தை பராமரிப்பு மற்றும் உணவுக்கான வசதிகள் செய்யப்பட வேண்டும். பெண்களை வாய்மொழியாக அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்துவது இந்திய சட்டத்திற்கு எதிரானது. இலவச சட்ட உதவிக்கான உரிமை பணம் இருக்கிறதோ இல்லையோ, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயமாக இலவச சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது.