
கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடி விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர், அருகில் இருந்த வீடுகள் தரைமட்டமானது என்று செய்திகள் வெளியானது.
தொடர்ந்து, இந்த விபத்திற்கு சிலிண்டர் கசிவு தான் காரணம் என்று தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் மாநிலங்களவையில் அதிமுக கட்சியின் எம்.பி.தம்பிதுரை கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
அதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு கேஸ் சிலிண்டரின் கசிவு காரணமில்லை என்று கூறியுள்ளார்.
விபத்து
தக்க நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல்
மேலும், தமிழக அரசு இது குறித்து தகுந்த விசாரணையினை நடத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி எம்.பி.தம்பிதுரை இன்று(ஆகஸ்ட்.,1)டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் பொழுது, கிருஷ்ணகிரியில் நடந்த இந்த வெடி விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, இது குறித்து அவர் ஒரு கடிதத்தையும் அமைச்சரிடம் வழங்கினார்.
முன்னதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த 30ம்தேதி இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அதன்பின் பேசிய அவர், இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.