கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் மழை; அடுக்கம் மலைப்பாதையில் மண் சரிவு
எழுதியவர்
Sekar Chinnappan
Oct 23, 2026
08:14 pm
செய்தி முன்னோட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப் பாதைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடுக்கம் பாலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இது அந்த பகுதியை பயன்படுத்தும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Kodaikanal Landslide | கொடைக்கானலில் மண் சரிவு - கதிகலங்க விடும் பேய் மழை.. #Kodaikanal #Landslide #HeavyRain #TNRains #WeatherUpdate #RainUpdate #ThanthiTV pic.twitter.com/X4feVriqZU
— Thanthi TV (@ThanthiTV) October 23, 2026