NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
    ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

    ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 08, 2023
    07:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் உலக தலைவர்கள், அரசாங்க சந்திப்புகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அவர்களுடைய மனைவிகளுக்கென தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இந்திய அரசு.

    இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தொட்டிலான 1,200 ஏக்கர் Pusa-IARI வளாகத்தில் சுற்றுப்பயணம், இந்தியாவின் வளமான விவசாய பாரம்பரியத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் வகையில் கண்காட்சி, மற்றும் புகழ்பெற்ற பிரபல சமையல்காரர்களால் தயாரிக்கப்பட்ட தினை சார்ந்த விருந்தை சுவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் பாதுகாப்பிற்காக, துணை ராணுவப் படையின் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் கமாண்டோக்களால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

    card 2

    தினை உணவுகள் மற்றும் லைவ் கிச்சன்

    குணால் கபூர், அஜய் சோப்ரா மற்றும் அனாஹிதா தோண்டி உள்ளிட்ட புகழ்பெற்ற சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட தினை அடிப்படையிலான விருந்தை லைவ் கிச்சன்-இல் ருசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவர்களுடன், ITC குழுமத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு சமையல் நிபுணர்கள் -- குஷா மாத்தூர் மற்றும் நிகிதா மெஹ்ரா ஆகியோர் இணைவார்கள்.

    'லைவ் குக்கிங் ஏரியா'வில், தினையை மையமாக வைத்து 'ஃபுல் கோர்ஸ் மீல்' தயாரிப்பார்கள் இந்த சமையல் கலைஞர்கள்.

    card 3

    ரங்கோலி

    "அறுவடையின் இணக்கம்" மற்றும் "வாழ்வில் ஒற்றுமை" ஆகிய இரண்டு கருப்பொருள்களுடன், தினைகளைப் பயன்படுத்தி, ரங்கோலியை உருவாக்கும், முதல் அனுபவத்தை சிறப்பு விருந்தினர்கள் பெறுவார்கள்.

    இந்த கலைப் படைப்புகள், விவசாய முறைகளில் இந்தியாவின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதில் அதன் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துக்காட்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    உள்நாட்டு விவசாய கைவினைப்பொருட்கள், பழங்கால தானியங்கள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்தியாவின் விவசாய பாரம்பரியத்தையும், வாழ்வாதாரத்திற்கான அர்ப்பணிப்பையும் கண்காட்சிப்படுத்தவுள்ளனர்.

    card 4

    ரூ. 8 லட்சம் சால்வை, ரூ. 3.5 லட்சம் புடவை

    நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் G20 தலைவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு ஒரு சிறிய சந்தையை உருவாக்கியுள்ளது.

    G20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முதல் பெண்மணிகள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், அவர்களை வரவேற்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்டில் (NGMA), இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் சின்னங்களை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

    இந்த கட்டிடத்தில் பெண்களுக்கான சல்வார் உடைகள், மட்பாண்ட பொருட்கள் மற்றும் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு சல்வார் உடையின் விலை ரூ 2.5 லட்சம். அதேபோல், நடராஜர் சிலை 6,000 டாலர் (ரூ. 4.98 லட்சம்) விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    card 5

    காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் நெசவு தயாரிப்புகள்

    குஜராத்தின் படான் பகுதியில் பாரம்பரியமாக நெய்யப்படும், இரட்டை இகாட் நெசவு நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, படன் படோலா உடைகள் கண்காட்சிப்படுத்தபட்டுள்ளது.

    விண்டேஜ் படோலா என்று அழைக்கப்படும் துணிகள் மிகவும் விலை உயர்ந்தது என்றும், ரூ 1.35 லட்சத்தில் தொடங்கி ரூ. 3.5 லட்சம் வரை இந்த தயாரிப்புகள் விற்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இது 900 ஆண்டுகள் பழமையான கலை என்றும், இந்த புடவைகள், அதே முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

    "ஒரு படன் பட்டோலா புடவையை உருவாக்க ஏழரை மாதங்கள் ஆகும்," என்று ஒரு நெசவாளர் கூறுகிறார்.

    அதேபோல பஷ்மினா சால்வை அதிகபட்சமாக ரூ. 8 லட்சம் வரை விற்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சால்வைகளை செய்ய 7-8 மாதங்கள் ஆனதாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜி20 மாநாடு
    டெல்லி
    புது டெல்லி

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  சென்னை
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு தமிழக அரசு
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  டெல்லி
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி

    டெல்லி

    செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம்  ஏர் இந்தியா
    மல்யுத்த வீரர்கள் வழக்கு: பிரிஜ் பூஷனுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் மல்யுத்த வீரர்கள்
    விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்; பரப்பான சூழலில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாடாளுமன்றம்
    டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி உடற்பயிற்சி

    புது டெல்லி

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை  ஜி20 மாநாடு
    ஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்? ஜி20 மாநாடு
    ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள் ஜி20 மாநாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025