Page Loader
செங்கல்பட்டில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீட்பு; கடத்தியது மாணவர்களின் தாய் என்பது அம்பலம்
கடத்தியது அந்த குழந்தைகளின் தாய் தான் என்பதும் அம்பலமாகியுள்ளது

செங்கல்பட்டில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீட்பு; கடத்தியது மாணவர்களின் தாய் என்பது அம்பலம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2024
10:09 am

செய்தி முன்னோட்டம்

செங்கல்பட்டு அருகே உள்ள ஓழலூரில் அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து நேற்று மாலை 11 வயது மாணவியும், அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது மாணவரும் கடத்தப்பட்ட நிலையில், இன்று காவேரிப்பாக்கம் பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களை கடத்தியது அந்த குழந்தைகளின் தாய் தான் என்பதும் அம்பலமாகியுள்ளது. ஆட்டோ டிரைவரின் குழந்தைகளான அந்த மாணவர்களை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றதாக பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, செங்கல்பட்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையை துவங்கினர். அதில், கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வேலன் அரவணைப்பில் மாணவர்கள் இருந்து வந்தது தெரிய வந்தது. அவர்களை, தாய் ஆர்த்தி மற்றொரு நபருடன் சேர்ந்து கூட்டிச்சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

பள்ளி மாணவர்கள் மீட்பு