கர்நாடக தேர்தல் - பிரச்சாரத்தில் களமிறங்கும் ராகுல் காந்தி
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் மற்றும் இதர கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை முன்நிறுத்தி பிரச்சாரத்தினை மிக தீவிரமாக செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி இந்த தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை துவங்கவுள்ளார். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திலிருந்து இவர் தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.