NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு

    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு

    எழுதியவர் Nivetha P
    May 18, 2023
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, அதில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியினை பிடித்தது.

    எனினும், முதல்வர் பதவியினை ஏற்கப்போவது யார்? என்னும் கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது.

    முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் கடும் போட்டி நிலவியது.

    இதனையடுத்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் மத்தியில் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.

    அவர்கள் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை அவர் கூறியுள்ளார்.

    முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகள் ஒருவரும் பதவி வகிக்கும் வண்ணம் செயல்படலாம் என்று அவர் கூறியதற்கு 2 பேருமே மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

    காங்கிரஸ் 

    முதல்வர் பதவி குறித்து கட்சி மேலிடம் முடிவு 

    இதனைத்தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே,மீண்டும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேற்று இரவு காணொளி காட்சிமூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    அப்போது எடுக்கப்பட்ட முடிவு குறித்து கே.சி.வேணுகோபால், ரன்தீப்சூர்ஜேவாலா ஆகியோர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் கட்சி தலைமை எடுத்துள்ள முடிவு குறித்து எடுத்துரைத்துள்ளார்கள்.

    அதன்படி, கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, முதல்வர், துணைமுதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கான பதவியேற்பு விழாவானது வரும் 20ம்தேதி நடைபெறவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டி.கே.சிவகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், யார் முதல்வர், துணை முதல்வர் என்பதனை கட்சி மேலிடம் முடிவுசெய்துள்ளது.

    காங்கிரஸ் நலனுக்காக சித்தராமையா முதல்வராவதில் என்ன தவறு.

    நான் கட்சிக்காக தியாகம் செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    காங்கிரஸ்
    சோனியா காந்தி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கர்நாடகா

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு  அதிமுக
    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா இந்தியா
    கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்று ஆருடம் கூறிய பைரவா நாய்  தேர்தல்
    உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்  இந்தியா

    காங்கிரஸ்

    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி இந்தியா
    கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார் இந்தியா
    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை இந்தியா
    எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை  கர்நாடகா

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025