Page Loader
காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர்
காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர்

காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர்

எழுதியவர் Nivetha P
Feb 09, 2023
07:58 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு-காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் இளவரசன். இவர் மும்பையில் உள்ள தனியார் பெயிண்ட் உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக முதுகலை பட்டதாரியான இவர் தற்போதுவரை 11 கின்னஸ் சாதனைகளை செய்து சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பொதுவாக டைப்பிங் என்றால் கணினி முன் அமர்ந்து டைப்பிங் அடிப்பது தான் வழக்கம். ஆனால் இவர் கணினியை முதுகிற்கு பின்னால் வைத்துகொண்டு கைகள் இரண்டையும் கணினி மீது வைத்து வித்தியாசமான முறையில் டைப்பிங் செய்து அதற்காக நான்கு கின்னஸ் சாதனைகளையும் பெற்றுள்ளார். அதேபோல தனது சுண்டு விரல்களை பயன்படுத்தி நொடிப்பொழுதில் A முதல் Z வரை டைப் செய்து அதற்காக ஓர் கின்னஸ் சாதனையும் பெற்றுள்ளார்.

கின்னஸ் சாதனை

தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம்-இளவரசன்

மேலும் அவர் கிரிக்கெட்டுக்கு பயன்படுத்தும் கையுறைகளை கொண்டு A முதல் Z வரை டைப்செய்து அதற்காக ஓர் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். தொடர்ந்து, தன் கண்களை கட்டிக்கொண்டு A முதல் Z வரையும் டைப்செய்தும், மொபைலில் ஒரேயொரு விரலை கொண்டு A முதல் Z வரை டைப் செய்தும், தன் கைகளை பயன்படுத்தி டேபிள் டென்னிஸ் பந்துகளை தலைகுப்புற பிடித்தும் சாதனை படைத்துள்ளார். இவ்வாறாக அவர் இதுவரை மொத்தம் 11கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் இதுவரை தனி நபர் ஒருவர் 23 சாதனைகளை படைத்ததே இன்று வரை முதன்மையானதாக உள்ளது. இதனை முறியடிப்பதே எனது நோக்கம். இதன் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.