
அதிகரிக்கும் கள்ளக்குறிச்சி மரண எண்ணிக்கைள்; 61 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
கருணாபுரம் கிராமத்தில் ஜூன் 18ஆம் தேதி விஷ சாராயம் குடித்த 118 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) இதைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் வழங்கக் கோரி வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விஷ சாராயம் குடித்ததில், ஆறு பெண்களும் மரணம் அடைந்ததை குறித்து தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து விசாரணைக்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு #வி_தமிழ் #vthamizh #vthamizhgigital #Kallakurichi #HoochTragedy pic.twitter.com/SxVFcQUhe0
— V Thamizh (@vthamizhdigital) June 26, 2024