LOADING...
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கிய சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா; முழுப் பின்னணி 
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கிய சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கிய சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா; முழுப் பின்னணி 

எழுதியவர் Sekar Chinnappan
Apr 10, 2026
12:46 pm

செய்தி முன்னோட்டம்

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மா, தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தன்னைச் சுற்றி நிலவி வந்த பண மீட்பு சர்ச்சைகள் மற்றும் அது தொடர்பாக நடைபெற்று வந்த நாடாளுமன்றக் குழுவின் விசாரணைகளுக்கு மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த ஒரு தீ விபத்தின் போது, அங்குக் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் இந்திய நீதித்துறையில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.

பின்னணி

சர்ச்சையின் பின்னணி: தீ விபத்தும் சிக்கிய பணமும்

இந்தச் சர்ச்சை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. டெல்லியில் உள்ள நீதிபதி வர்மாவின் இல்லத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர், வீட்டின் ஒரு பகுதியில் சுமார் 1.5 அடி உயரத்திற்குப் பணக்கட்டுகள் அடுக்கப்பட்டிருந்ததைக் கண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தைத் அப்போதைய தலைமை நீதிபதி கவனத்தில் கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி வர்மா டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டார். இருப்பினும், தனது வீட்டில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று நீதிபதி வர்மா தொடர்ந்து மறுத்து வந்தார்.

விசாரணை

விசாரணைக் குழு மற்றும் சட்டப் போராட்டங்கள்

இந்த விவகாரம் தொடர்பாக 2025 ஆகஸ்ட் மாதம், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் 'நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968'ன் கீழ் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார். இதில் உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்தர் மோகன் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவின் சட்டபூர்வத் தன்மையை எதிர்த்து நீதிபதி வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக்கு எவ்விதத் தடையும் விதிக்க மறுத்துவிட்டது.

Advertisement

காரணம்

ராஜினாமாவிற்கான காரணமும் இறுதி முடிவும்

இதற்கு முன்னதாக உச்சநீதிமன்றம் அமைத்த உள்நோக்கு விசாரணைக் குழு, பணம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அறையானது நீதிபதி வர்மா மற்றும் அவரது குடும்பத்தினரின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்ததை உறுதி செய்தது. விசாரணை தீவிரமடைந்து வந்த சூழலிலும், நாடாளுமன்றத்தில் பதவி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற நிலையிலும், நீதிபதி வர்மா தற்போது தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஒரு நீதிபதி மீதான இத்தகைய புகாரும், அதனைத் தொடர்ந்த ராஜினாமாவும் நீதித்துறையின் பொறுப்புடைமை குறித்து மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement