Page Loader
ஜம்மு-காஷ்மீர்: புத்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் லஷ்கர்-இடி பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீர்: புத்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை

எழுதியவர் Sindhuja SM
Jan 17, 2023
07:30 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் இன்று(ஜன:17) காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா(எல்இடி) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமான வாகனம் பாதுகாப்பு படையினரால் நிறுத்தப்பட்டது. அதனால், பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சண்டை நடந்து, அதற்கு பதில் தாக்குதல் நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைப் போலீசார் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. "கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் புல்வாமாவைச் சேர்ந்த அர்பாஸ் மிர் மற்றும் ஷாஹித் ஷேக் ஆவர். இவர்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்இடி உடன் தொடர்புடையவர்கள்." என்று காஷ்மீர் போலீஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

காஷ்மீர் போலீஸ் இது குறித்து பகிர்ந்த ட்விட்டர் பதிவு: