சென்னையில் நடக்கவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிக வாபஸ்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் கடந்த 2ம் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக ஏப்ரல் 11ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து அந்த அமைப்பினரை அழைத்து தமிழ்நாடு அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில், தங்கள் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்றும், தங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாகவும் அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளார்கள்.
இதன் காரணமாக முற்றுகை போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னையில் நடக்கவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் வாபஸ்
#BREAKING || ஏப்.11ஆம் தேதி நடைபெற இருந்த கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் வாபஸ் - ஜாக்டோ ஜியோ அமைப்பு பிரதிநிதிகள் அறிவிப்பு #JacttoGeo pic.twitter.com/MmXz8o8r4y
— Thanthi TV (@ThanthiTV) April 8, 2023