LOADING...
செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரைடு? இல்லையென்கிறது வருமான வரித்துறை! அடுத்தடுத்த திருப்பங்கள்
இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரைடு? இல்லையென்கிறது வருமான வரித்துறை! அடுத்தடுத்த திருப்பங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 20, 2026
03:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக எழுந்த புகாருக்கு, வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ள நிலையில், செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர், இந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு 'சோதனை' என்ற பெயரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் தன்னை சட்டவிரோதமாக முடக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்குச் செல்ல விடாமல் தடுப்பதற்கும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கும் மத்திய அரசு முகமைகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது என அவர் பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

விளக்கம்

வருமான வரித்துறையின் விளக்கம்

செல்வப்பெருந்தகையின் இந்த புகாரை வருமான வரித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து அந்தத் துறை அளித்துள்ள விளக்கத்தில், செல்வப்பெருந்தகையின் வீடு அல்லது அவருக்குத் தொடர்புடைய எந்த இடத்திலும் இன்று வருமான வரிச் சோதனை (IT Raid) ஏதும் நடத்தப்படவில்லை எனத்தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு அவர் செல்வதை தடுத்ததாக கூறப்படும் தகவல்களும் உண்மை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள் மற்றும் வருமான வரித்துறையினர் குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இது 'ரெய்டு' இல்லை என்று ஐடி துறை விளக்கம் அளித்துள்ளது. செல்வப்பெருந்தகை இதனை "திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்று விமர்சித்த நிலையில், ஐடி துறையின் இந்த மறுப்பு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement